விபத்தில் உயிரிழந்த ஜெயபால். 
தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை அருகே ரயில் மோதி கேங்மேன் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் காந்திநகர் பகுதியில், சனிக்கிழமை அதிகாலை தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர் ரயில் மோதி உயிரிழந்தார்.

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் காந்திநகர் பகுதியில், சனிக்கிழமை அதிகாலை தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர் ரயில் மோதி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள சொர்ணாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால்( 49). இவர் ரயில் தண்டவாளத்தை பராமரிக்கும் கேங்மேனாக வேலை பார்த்து வருகிறார்.

வெள்ளிக்கிழமை வழக்கம்போல் விழுப்புரம்- விருத்தாச்சலம் ரயில்வே மார்க்கத்தில் இரவு பணி மேற்கொண்ட ஜெயபால், சனிக்கிழமை அதிகாலை, விழுப்புரம்-விருத்தாசலம் இடையே உளுந்தூர்பேட்டையை அடுத்த பாதூர் காந்திநகர் பகுதியில், ரயில்வே தண்டவாளத்தின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டபோது ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்து கிடந்தார்.

 சம்பவ இடத்தில் விசாரணை நடத்தும் ரயில்வே போலீசார்.

விசாரித்தபோது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலும், சென்னை நோக்கி சென்ற செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒரே நேரத்தில், பாதூர் பகுதியில் கடந்துசென்றபோது, எதிர்பாராத விதமாக ஜெயபால் மீது ரயில் மோதி உள்ளது. இதில் உடல் நசுங்கிய நிலையில் அவர் உயிரிழந்தார். 

இதுபற்றி தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் விரைந்து வந்து, ஜெயபாலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

வேளாண் பல்கலை.யில் மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி

15.1.1976: ஸ்ரீலங்காவிலிருந்து சென்ற ஆண்டு 18,500 பேர் வருகை

ஜேடா்பாளையத்தில் அரசா் அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் தீவிரம்

SCROLL FOR NEXT