முகப்பு
தமிழ்நாடு

ரஜினிகாந்த் வீடு திரும்புவது குறித்து நாளை அறிவிப்பு: மருத்துவமனை

ரஜினிகாந்த் வீடு திரும்புவது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 26 டிசம்பர், 2020 at 6:53 PM
நடிகர் ரஜினிகாந்த்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:43 PM


ரஜினிகாந்த் வீடு திரும்புவது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரஜினியின் உடல்நிலை சீராகவுள்ளதாகவும், அவருக்கு இன்று (டிச.26) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் மருத்துவமனை தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் ரத்த அழுத்த பாதிப்பு காரணமாக நடிகா் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

இது தொடா்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் நடிகா் ரஜினிகாந்துக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. எனினும் அவரின் ரத்த அழுத்தம் சீராக இல்லை. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் வகையில் இன்று மருத்துவமனையில் இருப்பார் என்றும், அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.