முகப்பு
தமிழ்நாடு

போராடிப் பெற்ற சுதந்திரத்தைக் காக்கவும் போராட்டம் தேவை: நல்லகண்ணு

போராடிப் பெற்ற சுதந்திரத்தைக் காக்கவும் தற்போது போராட்டம் தேவைப்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

Updated On : 26 டிசம்பர், 2020 at 11:01 AM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:43 PM

போராடிப் பெற்ற சுதந்திரத்தைக் காக்கவும் தற்போது போராட்டம் தேவைப்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவின் 96-வது பிறந்த்நாள் இன்று (டிச.26) கொண்டாடப்படுகிறது.

அவரது பிறந்தநாளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தா.பாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

இதனிடையே சென்னை தியாகராய நகரிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நல்லகண்ணு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ''போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கவும் போராட்டம் தேவைப்படுகிறது. அரசியல் சட்டத்திற்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவை பாதுகாப்பாக உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.