தமிழ்நாடு

நெல்லை அருகே செப்பறை அழகியகூத்தர் கோயிலில் தேரோட்டம்

DIN

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தில் உள்ள செப்பறை அருள்மிகு அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரைத் திருவிழாவையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராஜவல்லிபுரத்தில் தாமிரவருணி நதியின் கரையோரம் பழமை வாய்ந்த செப்பறை அழகிய கூத்தர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவாதிரைத் திருவிழா விமரிசையாக நடைபெறும்.  நிகழாண்டுக்கான விழா கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனைகள் நடைபெற்றன.

7ஆம் திருநாளில் சுவாமி அழகிய கூத்தர் விழா மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிவப்பு, பச்சை சாத்திச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் தேருக்கு மலர் அலங்காரத்துடன் சுவாமி எழுந்தருளினார். முற்பகலில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.  சுமார் 1 மணி நேரத்திற்குள் தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் தாழையூத்து, திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை, கங்கைகொண்டான் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து திருவாதிரைத் திருவிழாவின் சிகர நிகழ்வாக புதன்கிழமை (டிச. 30) அதிகாலை அதிகாலை 2 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகமும் 5.30 மணிக்கு கோ பூஜை, ஆருத்ரா தரிசனமும், நண்பகல் 1.30 மணிக்கு நடராஜர் திருநடனக் காட்சியும், அழகிய கூத்தர் வீதியுலாவும் நடைபெறுகிறது. மாலையில் பஞ்சமுக அர்ச்சனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT