தமிழ்நாடு

மேட்டுப்பாளையம்-உதகை இடையே வழக்கமான சாதாரண கட்டணத்தில் மீண்டும் மலை ரயில் இயக்கம்

மேட்டுப்பாளையம்-உதகை இடையே வியாழக்கிழமை முதல் வழக்கமான சாதாரண கட்டணத்தில் மீண்டும் மலை ரயில் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

DIN


மேட்டுப்பாளையம்-உதகை இடையே வியாழக்கிழமை முதல் வழக்கமான சாதாரண கட்டணத்தில் மீண்டும் மலை ரயில் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனிடைய ரயிலில் பயணம் செய்ய பயண சீட்டை இணையதளம் வாயிலாக பெற முடியும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு உதகை வரை மலை ரயில் ஆங்கிலேயர் காலத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி இயற்கையான பசுமையான சூழலில் அடர்ந்த வனப்பகுதியின் வழியாக கல்லாறு, அடர்லி, ரன்னிமேடு குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல் வழியாக உதகையை 46 கி.மீ தூரம் கடந்து செல்கிறது. 

இந்த மலை ரயில் பாதையின் இடையே 19.50 கி.மீ தூரம் பல்சக்கரபாதையிலும், 209 வளைவுகள், 16 ரயில் குகைகள், 250 பாலங்களை கடந்து செல்கிறது. 

இதில் அடர்ந்த வனப்பகுதியில் செல்லும் போது காட்டுடெருமை, காட்டுயனை, கரடி, சிறுத்தை, புள்ளிமான், கடமான், வரையாடு மற்றும் பல்வேறு வகையிலான பறவைகள் மட்டுமல்லாமல் நீர்வீழ்ச்சிகளையும் பார்த்து ரசித்து செல்லும் வகையில் இருக்கும். 

இதனால் இந்த ரயிலில் பயணம் செய்ய உள்ளுர் மட்டுமல்லாமல் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளானமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் மலை ரயிலுக்கு சர்வதேச கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் உலக பழமையான கலாச்சார இடங்களில் ஒன்றாக அங்கீகாரம் வழப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் கரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், நாடுமுழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் மீண்டும் மலை ரயில் 9 மாதங்களுக்கு பின் வியாழக்கிழமை முதல் வழக்கமான சாதாரண பழைய கட்டணத்தில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகைக்கு மலை இயக்கப்பட்டது. இதோடு மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 4 பெட்டிகளுடனும், குன்னூர் முதல் உதகை வரை 5 பெட்டிகளுடனும் இயக்கப்படுகிறது.

மேலும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு குன்னூர் வழியாக உதகைக்கு பகல் 11.55 மணிக்கு செல்லும். மீண்டும் உதகையில் இருந்து மதியல் 3 மணிக்கு புறப்பட்டு குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்திற்கு மாலை 6.30 மணிக்கு வந்தடையும். 

இதில் பயணம் செய்ய டிக்கெட் இணைய தளம் வழியாக பதிவு செய்து பெற்று கொள்ளலாம். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாராந்திர ரயில்களின் சேவைகள் நீட்டிப்பு

அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும் கடகத்துக்கு: தினப்பலன்கள்!

திமுக தோ்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்: கனிமொழி எம்.பி.

தேமுதிக இண்டி கூட்டணிக்கு வரவேண்டும்: ஜோதிமணி எம்.பி.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: டி.டி.வி. தினகரன்

SCROLL FOR NEXT