ஓவியம், சிற்பக் கலைஞர்களுக்கான விருது, விருதுத் தொகை அதிகரிப்பு: ஆணை வெளியீடு
கலைஞர்களைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் விருதுகளும், விருதுத் தொகையும் உயர்த்தப்பட்டதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைத் துறைகளின் மரபு வழி மற்றும் நவீனபாணி கலைப் பிரிவுகளில் புகழ்பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் விருதுகளும், விருதுத் தொகையும் உயர்த்தப்பட்டதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைத் துறைகளின் மரபு வழி மற்றும் நவீனபாணி கலைப் பிரிவுகளில் புகழ்பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களைப் பாராட்டும் வகையில் தமிழக அரசின் கலைப்பாண்பாட்டுத் துறையால், ஆண்டுதோறும் மரபுவழி பிரிவில் ஒரு கலைஞருக்கும், நவீனபாணி பிரிவில் ஒரு கலைஞருக்கும், கலைச்செம்மல் விருது வழங்கப்பட்டு, ஒரு கலைஞருக்கு ரூ.50,000 வீதம் பணமுடிப்பும், சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 24.03.2020 அன்று கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர், தமிழ் ஆட்சிமொழி, மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அவர்களால் தமிழகத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைத் துறைகளின் மரபு வழி மற்றும் நவீனபாணி கலைப் பிரிவுகளில் புகழ்பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைச்செம்மல் விருது தொகையினை ரூ.50,000/-த்திலிருந்து ரூ.1 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் மேலும் விருதாளர்களின் எண்ணிக்கை 2-லிருந்து 6 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அவ்வாறே ஓவியம் மற்றும் சிற்பக் கலைத் துறைகளின் மரபு வழி மற்றும் நவீனபாணி கலைப் பிரிவுகளில் புகழ்பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைசெம்மல் விருது தொகையினை ரூ.50,000/-த்திலிருந்து ரூ.1 இலட்சமாக உயர்த்தி வழங்கிடவும் மேலும் விருதாளர்களின் எண்ணிக்கை 2-லிருந்து (மரபுவழி-1, நவீனபாணி-1) மரபுவழிப்பிரிவு மற்றும் நவீன பாணிப் பிரிவுக்கென தலா 3 என விருதாளர்களின் எண்ணிக்கையினை 6 ஆக உயர்த்தியும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.