முகப்பு
தமிழ்நாடு

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில் கனமழை

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கெங்கவல்லி மற்றும் சுற்று வட்டாரத்தில் பனி அதிகமாக இருந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கெங்கவல்லி மற்றும் சுற்று வட்டாரத்தில் கனமழை.
பகிர்:


தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கெங்கவல்லி மற்றும் சுற்று வட்டாரத்தில் பனி அதிகமாக இருந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதல் லேசாக துவங்கிய மழை, நேரம் ஆக ஆக தற்போது கனமழையாக, இடி, மின்னல் இல்லாமல் பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கி, மக்கள் வீட்டிலேயே உள்ளனர்.

பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தம்மம்பட்டியிலிருந்து துறையூர், திருச்சி, ஆத்தூர், சேலம், ராசிபுரம் செல்லும் பேருந்துகள் ஓரிரு பயணிகளுடன் செல்கின்றன. பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இம் மழை தொடர்ந்து பெய்தால், புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →