தமிழ்நாடு

ஜன. 1 முதல் வாட்ஸ்ஆப் இயங்காத செல்லிடப்பேசிகள்

DIN


கீழே குறிப்பிடும் ஏதேனும் ஒரு ஆன்டிராய்ட் செல்லிடப்பேசிகளை நீங்கள் வைத்திருந்தால், ஒரு வேளை 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் உங்கள் செல்லிடப்பேசியில் வாட்ஸ்அப் செயலி இயங்காமல் போகலாம்.

பழைய ஆப்ரேடிங் சிஸ்டங்கள் (ஓஎஸ்) கொண்ட செல்லிடப்பேசிகளில் இயங்கும் வாய்ப்பை வாட்ஸ்அப் கம்பெனி நீக்கி விட்டதே இதற்குக் காரணம்.

இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்தில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளில் கிடைத்த பதிலில், ஆன்டிராய்ட் 4.0.3 ஆபரேடிங் சிஸ்டம் கொண்ட செல்லிடப்பேசிகள் அல்லது புதிய ஐஃபோன்கள் அதாவது ஓஎஸ் 9 மற்றும் புதிய ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்கும் செல்லிடப்பேசிகளில் மட்டுமே வாட்ஸ்அப் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதவாது,  ஆபரேடிங் சிஸ்டம் 4 வரை கொண்ட அனைத்து செல்லிடப்பேசிகளும் நாளை முதல் வாட்ஸ்அப் செயலியை இழக்க நேரிடும், இதில், ஐஃபோன்களான 4எஸ், ஐஃபோன் 5, ஐஃபோன் 5எஸ், ஐஃபோன் 6 மற்றும் ஐஃபோன் 6எஸ் ஆகியவற்றிலும் வாட்ஸ்அப் இயங்காது என்று தெரிகிறது.

எச்டிசி டிசையர், மோட்டரோலா டிராய்ட் ராஸர், எல்ஜி ஆப்டிமஸ் பிளாக், சாம்சங் காலக்ஸி எஸ்2 ஆகியவையும் 2020 ஆம் ஆண்டுடன் வாட்ஸ்அப் செயலியை இழக்கிறது.

உங்கள் செல்லிடப்பேசி எந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிறது என்பதை, செட்டிங் மெனுவில் சென்று பார்க்கலாம். அதற்கு செட்டிங் மெனுவில், ஜெனரல் மற்றும் இன்ஃபர்மேஷன் ஆப்ஷனை தேர்வு செய்து, அதில் சாஃப்ட்வேர் என்பதை கிளிக் செய்தால், அதில் ஆபரேடிங் சிஸ்டம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT