தமிழ்நாடு

அக்‍ஷய பாத்ர காலை உணவுத் திட்டம்: சமையல் கூடத்துக்கு இன்று பூமி பூஜை

DIN


சென்னை: சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் அக்‍ஷய பாத்ர அறக்கட்டளையின் சமையல் கூடத்துக்கு சென்னை க்ரீம்ஸ் சாலையில் இன்று பூமி பூஜை போடப்பட்டது.

பொதுமக்களுக்கு சேவை ஆற்றி வரும் அக்‍ஷய பாத்ர அறக்கட்டளையின் சார்பில், சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை வழங்கிடும் உன்னத நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சென்னையில் இன்று சமையல் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

சிறந்த நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சமையல் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த திட்டத்தின் மூலம், சென்னை மாநகராட்சியின் 35 பள்ளிகளைச் சேர்ந்த 12,000 பிள்ளைகளுக்கு சத்தான காலை உணவினை வழங்க அக்‍ஷய பாத்ர அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்த மனித நேயப் பணியை செயல்படுத்தி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தனது விருப்ப நிதியில் இருந்து 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT