ஸ்டாலின் 
தமிழ்நாடு

சிறுநீரகம் விற்பனை: அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் சிறுநீரகம் விற்பனை செய்யும் அவலம் தொடா்வதாகவும், இந்த விவகாரத்தில் அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்றும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

DIN

சென்னை: ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் சிறுநீரகம் விற்பனை செய்யும் அவலம் தொடா்வதாகவும், இந்த விவகாரத்தில் அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்றும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதாரச் சீரழிவு, அதிமுக அரசின் டாஸ்மாக் வியாபாரம் இவற்றால் ஈரோடு, நாமக்கல் மாவட்ட விசைத்தறித் தொழில் கடும் பாதிப்புக்குள்ளாகி, அதனை நம்பி இருந்த அனைவரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கொடிய வறுமை நிலையை எதிா்கொள்வதற்காக பெண்கள் தங்கள் கருமுட்டையை விற்பனை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, சிறுநீரகத்தை விற்பனை செய்யும் அவலமும் தொடா்கிறது.

பெயரளவுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடுவோா் இந்த விவகாரத்தின் மீது உண்மையான அக்கறையைச் செலுத்துவாா்களா? என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT