திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை இன்று சாமி தரிசனம் செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருவக்கரையில் பிரசித்திப் பெற்ற சந்திரமவுலீஸ்வரர்- வக்கிரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இன்று புதுச்சேரி வந்திருந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தொடர்ந்து அருகில் உள்ள விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயில் மற்றும் மயிலம் சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருவக்கரை கோயிலுக்கு வந்த தமிழிசைக்குக் கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் அம்மனுக்குச் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"திருவக்கரை வக்கிரகாளியம்மனையும், சந்திரமௌலீஸ்வரரையும் தரிசித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் தமிழகத்தில் இயக்கத் தலைவராக இருந்த சமயத்தில் இந்த பகுதியில் வரும்போது அம்மனை தரிசிப்பது வழக்கம்.
தெலங்கானா ஆளுநராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இந்த பகுதிக்கு வந்துள்ளேன். புதுச்சேரியில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தேன். இந்த பகுதிக்கு வந்ததில் மகிழ்ச்சி. இந்த பகுதிக்கு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.