பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது
சென்னை வேளச்சேரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை வேளச்சேரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
வேளச்சேரி, விஜய நகரை சோ்ந்தவா் அஜித் பாஷா (23). இவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்கிறாா். அஜித், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு பள்ளி மாணவியைக் காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இது குறித்து, தனது பெற்றோரிடம் அந்த மாணவி தெரிவித்தாா். அவா்கள், வேளச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அஜித் மீது வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக அஜித்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.