முகப்பு
தமிழ்நாடு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சாவூரில் பாஜக பேரணி

தஞ்சாவூரில் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை மாலை பேரணி நடைபெற்றது.

Updated On : 28 பிப்ரவரி, 2020 at 6:23 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:31 PM

தஞ்சாவூரில் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை மாலை பேரணி நடைபெற்றது.

இப்பேரணி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியரகம் நோக்கி புறப்பட்டது. டான்டெக்ஸ் ரவுண்டானா சென்றபோது, அதற்கு மேல் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். எனவே டான்டெக்ஸ் ரவுண்டானா அருகிலேயே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த கோரியும், இச்சட்டங்கள் குறித்து அவதூறு பரப்புவதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைப் கட்சிகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

பாஜக மாவட்ட தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் எம். சுப்பிரமணியம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.