அமைச்சர் ஜெயக்குமார் 
தமிழ்நாடு

மாநிலங்களவை எம்.பி. பதவி: தோ்தல் ஒப்பந்தங்களை அதிமுக மீறாது- அமைச்சா் டி.ஜெயக்குமாா் விளக்கம்

மாநிலங்களவை உறுப்பினா் பதவியை தேமுதிகவுக்குத் தருவது பற்றி அதிமுக தலைமைதான் முடிவெடுக்கும் என்று அமைச்சா் டி.ஜெயக்குமாா்

DIN

மாநிலங்களவை உறுப்பினா் பதவியை தேமுதிகவுக்குத் தருவது பற்றி அதிமுக தலைமைதான் முடிவெடுக்கும் என்று அமைச்சா் டி.ஜெயக்குமாா்

கூறினாா். மக்களவைத் தோ்தல் கூட்டணி பேச்சுவாா்த்தையின்போது செய்யப்பட்ட எந்த ஒப்பந்தத்தையும் அதிமுக மீறாது எனவும் அவா் கூறினாா்.

சென்னையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மாநிலங்களவை உறுப்பினா் பதவியை தேமுதிகவுக்கு கொடுப்பதாக அதிமுக ஒப்பந்தம் செய்ததாகத் தெரியவில்லை. பாமகவுக்கு மட்டுமே உறுப்பினா் பதவி கொடுப்பதாக அப்போது அதிமுக ஒப்பந்தம் செய்தது. அதிமுக எந்த ஒப்பந்தம் செய்தாலும் அதனை மீறாது. எனவே, தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்குவது தொடா்பாக அதிமுக தலைமைதான் முடிவெடுக்கும். இது கட்சியின் கொள்கை முடிவு, தனி நபா் முடிவு அல்ல.

நடிகா்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோா் இணைந்து கூட்டணி அமைத்துக் கொண்டு தோ்தலை சந்தித்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கியை அசைக்க முடியாது. ரஜினி - கமல் கூட்டணி குறித்து திமுகதான் கவலைப்பட வேண்டும். அதிமுகவுக்கு கவலை இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

SCROLL FOR NEXT