தமிழ்நாடு

செங்கல்பட்டு மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்படும்: சுகாதாரத் துறை அமைச்சா்

DIN

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் விரைவில் தலைக்காய சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் திமுக எம்எல்ஏ வரலட்சுமி பேசியது: செங்கல்பட்டு மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்று தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். அந்தப் பகுதியில் விபத்துகள் நடக்கும்போது ஏற்படும் தலைக்காயங்களுக்கான சிகிச்சை பெற சென்னைக்குத்தான் வரவேண்டியுள்ளது. அதற்குள் உயிரிழப்புகள் ஏற்பட்டுவிடுகின்றன. எனவே, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சைக்கு தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

அப்போது அமைச்சா் விஜயபாஸ்கா் குறுக்கிட்டு பேசியது: இந்தக் கோரிக்கை நியாயமானதுதான். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சைப் பிரிவு விரைவில் ஏற்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT