தமிழ்நாடு

செல்போன் திருடிவிட்டு ஓடி பிடிபட்ட திருடன்: எச்சரிக்கை மட்டும் செய்து அனுப்பிய போலீசார்!

DIN

கடலூர்: அரசு மருத்துவமனையில் செல்போன் திருடி ஓடி மிரட்டி போலீசாரிடம் பிடிபட்டவரை காவல்துறை ஆய்வளார் எச்சரிக்கை மட்டும் விடுத்து அனுப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மதியம் பொதுமக்கள் சிலர் திருடன் திருடன் என கத்திக்கொண்டு ஒருவரைத் துரத்தினர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில்இருந்த போலீசாரும் பொதுமக்களுடன் சேர்ந்து திருடனைத் துரத்தினர் ஒரு கட்டத்தில் அரசு மருத்துவமனையை விட்டு வெளியேறி எதிரிலிருந்த பகவதி அம்மன் கோயில் தெருவில் திருடன் தப்பி ஓடினான் எனினும் பொதுமக்களும் துரத்தினர்

அப்போது ஒரு மரத்தில் ஏறி சுமார் 25 அடி உயர மதில் சுவரைத் தாண்டும் முயற்சியில் திருடன் ஈடுபட்டான் இதனால் சுதாரித்துக்கொண்ட போலீசார் தங்களிடம் துப்பாக்கி இருப்பதாகவும் தப்பி ஓட நினைத்தால் சுட்டு விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர் இதனை உண்மை என நம்பிய திருடன் மரத்திலிருந்து கீழே இறங்கினான் அவனை போலீசார் கடலூர் புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர். திருடனை விசாரித்த ஆய்வாளர் அவனை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார் அவனிடமிருந்து செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தார்.

விசாரணையில்,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரிடம் செல்போனை திருடிக்கொண்டு ஓடியதும், பொதுமக்கள் துரத்தியதும் தெரிய வந்தது. பின்னர் செல்போனை பறிகொடுத்தவரிடம் ஒப்படைத்து விட்டு, திருடனை பெயருக்கு எச்சரித்து அனுப்பினார். இதனால் திருடனை துரத்தி பிடித்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பிடிபட்ட திருடன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT