மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை முயற்சி: ஈரோட்டில் பரபரப்பு
ஈரோட்டில் மனைவியைக் கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு, விசைத்தறி உரிமையாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடுமனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை முயற்சி: ஈரோட்டில் பரபரப்பு
ஈரோட்டில் மனைவியைக் கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு, விசைத்தறி உரிமையாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் மனைவியைக் கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு, விசைத்தறி உரிமையாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு பழையபாளையம் அன்னை நகரைச் சேர்ந்தவர் சுந்தரம்(64). விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி ஜமுனா ராணி(55) இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். தம்பதியர் இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது .
இந்நிலையில் சனிக்கிழமை காலை மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த சுந்தரம் கட்டையால் மனைவி ஜமுனாராணியை தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஜமுனா ராணி உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து வெளியூரில் இருக்கும் தனது மகனுக்கு சுந்தரம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். அவரது மகன் இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஜமுனாராணி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அப்போது வீட்டில் இருந்த சுந்தரம் கத்தியால் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீஸார், சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.