தமிழ்நாடு

வாடிப்பட்டியில் உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைப்பு

DIN

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உறுப்பினர்கள் வராததால் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மதுரை வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக 7 வார்டுகளிலும், திமுக 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. சுயேச்சை உறுப்பினர் ஒரு வார்டில் வெற்றி பெற்றார். இந்நிலையில் சுயேச்சை உறுப்பினர் ஆதரவு திமுகவுக்கு கிடைத்ததால் ஊராட்சி ஒன்றியத்  தலைவர் பதவியை பிடித்து விடலாம் என்பதால், மறைமுகத் தேர்தலுக்கு அதிமுக உறுப்பினர்கள் சுயேச்சை உறுப்பினருடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர்.

ஆனால் மறைமுகத் தேர்தலுக்கு திமுக உறுப்பினர்களும், அதிமுகவைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் வரவில்லை. மொத்த உறுப்பினர்களில் பாதிக்கு மேல் அதாவது 8 உறுப்பினர்கள் வருகை இருந்தாலே தேர்தலை நடத்த முடியும். ஆனால், தற்போது 7 உறுப்பினர்கள் மட்டுமே வருகை தந்துள்ளனர். இதனால் 12 மணி வரை தேர்தல் தொடங்கப்படாமல் இருந்தது. அதன்பின்னரும் உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT