தமிழ்நாடு

தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அறிவிப்பு: சிகாகோ தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது

2019ம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

DIN

சென்னை: 2019ம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2019ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்த்தாய் விருதுடன் ரூ.5 லட்சம், நினைவுப்பரிசு, பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

மேலும் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விவரம்: 
கபிலர் விருது - புலவர் வெற்றி அழகன்
உ.வே.சா. விருது - வெ.மகாதேவன்
கம்பர் விருது - முனைவர் சரஸ்வதி ராமநாதன்
சொல்லின் செல்வர் விருது - முனைவர் கவிதாசன்
மறைமலை அடிகளார் விருது - முத்துக்குமாரசாமி
முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது - நாகராசன்
அம்மா இலக்கிய விருது - உமையாள் முத்து
மொழி பெயர்ப்பாளர் விருது - மாலன்
இளங்கோவடிகள் விருது - கவிக்கோ ஞானச் செல்வன்(எ) திருஞானசம்பந்தம்
உமறுப்புலவர் விருது - லியாகத் அலிகான்
மொழியியல் விருது - இலங்கை முனைவர் சுபதினி ரமேஷ்
சிங்காரவேலர் விருது - அசோகா சுப்பிரமணியன்
அயோத்திதாஸப் பண்டிதர் விருது - பிரபாகரன்
ஜி.யு. போப் விருது - மரிய ஜோசப் சேவியர்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விருதுகளுடன் ரூ.1 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அவசர நிலை திரும்பப் பெறப்பட்டது: அகமதாபாத் விமான நிலைய நிர்வாகம்

டாடா கம்யூனிகேஷன்ஸ் நிகர லாபம் 27% சரிவு!

வடகிழக்குப் பருவமழை: நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இம்மாதமே பெறலாம்!

பிகார் தேர்தல்: 57 வேட்பாளர்களை அறிவித்தார் நிதீஷ் குமார்!

SCROLL FOR NEXT