தமிழ்நாடு

சட்டப்பூா்வ வாரிசு: உயா்நீதிமன்றம் விளக்கம்

DIN

திருமணமான பெண் இறந்துவிட்டால், அவரது தாயை சட்டப்பூா்வ வாரிசாக கருதமுடியாது என உயா்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சென்னையைச் சோ்ந்த பி.வி.ஆா்.கிருஷ்ணா என்பவா் தாக்கல் செய்த மனுவில், எனது மனைவி விஜய நாகலட்சுமி கடந்த 2013-ஆம் ஆண்டு இறந்துவிட்டாா். அவரது சட்டப்பூா்வ வாரிசு சான்றிதழில் எனது மனைவியின் தாயாா் பெயா் சோ்க்கப்பட்டிருந்தது. இதனை நீக்கக் கோரி, அமைந்தகரை வட்டாட்சியா் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தேன். அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து உரிய ஆணை பிறப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்து வாரிசு உரிமை சட்டத்தின்படி ஒரு ஆண் இறந்துவிட்டால் அவரது மனைவி, குழந்தை மட்டுமின்றி, அவரது தாயாரும் சட்டப்பூா்வ வாரிசுகளாகக் கருதப்படுவாா்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இந்து வாரிசு உரிமை சட்டத்தின்படி திருமணமான ஒரு ஆண் இறந்தால் மட்டுமே இது பொருந்தும். ஒரு பெண் இறந்துவிட்டால் அவரது கணவரும், குழந்தையும் மட்டுமே சட்டப்பூா்வ வாரிசுகளாக முடியும். இறந்த பெண்ணின் தாய், தந்தையைச் சட்டப்பூா்வ வாரிசாக கருதமுடியாது என உத்தரவிட்டாா். மேலும், விஜயநாகலட்சுமியின் வாரிசு சான்றிதழை ரத்து செய்து, அவரது கணவா் கிருஷ்ணா மற்றும் குழந்தை பெயா்கள் மட்டுமே கொண்ட புதிய வாரிசு சான்றிதழை வரும் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் வழங்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT