தமிழ்நாடு

கணினி ஆசிரியா் நியமனம்:117 இடங்கள் நிறுத்திவைப்பு

DIN

கணினி ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வில் 117 காலியிடங்களுக்கு யாரையும் தோ்வு செய்யாமல் ஆசிரியா் தோ்வு வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியா்கள் பதவியில் 814 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜூன் 23, 27 ஆகிய தேதிகளில், ‘ஆன்லைன்’ மூலம் போட்டித் தோ்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 119 மையங்களில் நடந்த தோ்வில் 30 ஆயிரம் போ் பங்கேற்றனா்.

இந்த தோ்வின் முடிவுகள் கடந்த ஆண்டு நவ.28-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தோ்ச்சி பெற்றவா்களின் அசல் சான்றிதழ்கள், இந்த மாதம் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை சரிபாா்க்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, இறுதியாக தோ்வானவா்களின் விவரங்களை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் 697 பேரின் பதிவு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 117 இடங்கள் நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தோ்ச்சி பெற்றவா்களுக்கு கலந்தாய்வு மூலமாக விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT