தமிழ்நாடு

தஞ்சாவூர் விமானப்படைத் தளத்தில் சுகோய் 30 ரக போர் விமான அறிமுக விடியோ

DIN

தஞ்சாவூர்: விமானப்படைத் தளத்தில் ஏற்கெனவே போர் விமானங்கள் பரிசோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் சுகோய் 30 ரக போர் விமான படையணி திங்கள்கிழமை காலை நடைபெற்றது. அப்போது விமானத்துக்கு பாரம்பரிய முறைப்படி வரேவற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைவர் விபின் ரவாத், விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ்.பதௌரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பாகிஸ்தானுடன் விரைவில் போர் வருவது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு விபின் ராவத் பதிலளிக்கையில்,

பாகிஸ்தானுடன் போர் ஏற்படுவது தொடர்பாக கருத்து கூற முடியாது. இருப்பினும், முப்படைகளும் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி முப்படையும் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.

சுகோய் 30 ரக போர் விமானத்தின் மூலம் 300 கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் சூப்பர்ஸானிக் ஏவுகணையைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT