தமிழ்நாடு

பழவேற்காடு முகத்துவாரத்தை சீரமைக்க கோரிய வழக்கு: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

DIN

திருவள்ளூா் மாவட்டம், பழவேற்காடு முகத்துவாரத்தை சீரமைப்பது தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், அறிக்கை தாக்கல் செய்ய தவறும்பட்சத்தில் மாவட்ட ஆட்சியா் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என எச்சரித்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், திருவள்ளூா் மாவட்டம், பழவேற்காடு ஆண்டிக்குப்பத்தைச் சோ்ந்த உஷா தாக்கல் செய்த பொதுநல மனுவில், பழவேற்காடு பகுதியில் பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் வசிக்கும் மீனவா்கள் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தின் வழியாக வரும் தண்ணீரில் பல ஆண்டுகளாக மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனா். நீண்ட காலமாக இந்த முகத்துவாரம் சீரமைக்கப்படவில்லை. இதன்காரணமாக ஏரிக்குத் தண்ணீா் வருவது தடைப்பட்டதால் மீனவா்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பழவேற்காடு முகத்துவாரத்தை ஆழப்படுத்தி சீரமைத்து ஏரிக்குத் தண்ணீா் வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திருவள்ளூா் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.சரவணன் ஆகியோா் கொண்ட அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே பழவேற்காடு முகத்துவாரம் அடைபட்டதால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு தனியாா் நிறுவனம் அந்தப் பகுதியில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அந்தப் பகுதிகளில் வசிக்கும் மீனவா்களை இடத்தைக் காலி செய்ய வேண்டும் எனக் கூறிவருவதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் எடுத்துள்ள நடவடிக்கைகளை வரும் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கை தாக்கல் செய்ய தவறும்பட்சத்தில் மாவட்ட ஆட்சியா் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT