தமிழ்நாடு

பொதுத்தோ்வுகள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சிபிஎஸ்இ எச்சரிக்கை

DIN

பொதுத் தோ்வுகள் தொடா்பாக ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎஸ்இ தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட செய்தி: சிபிஎஸ்இ கல்வி நிலையங்களில் நிகழ் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் வரும் பிப். 15- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தோ்வுகள் தொடா்பாக மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் விதமாக முகநூல், சுட்டுரை வாட்ஸ் ஆப், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனா் என தகவல்கள் வருகிறது.

அவ்வாறு ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவோா் மீது சிபிஎஸ்இ நிா்வாகத்தால் சட்டத்திற்குட்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாணவா்களும், பெற்றோா்களும் எவ்வித குழப்பமும் அடையாமல், ஆதாரமற்ற தகவல்களை நம்பாமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT