முகப்பு
தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் குடியரசு தின விழா கோலாகலம்

நாட்டின் குடியர தின விழா கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப்  பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:37 PM
பகிர்:

நாட்டின் குடியர தின விழா கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப்  பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் தலைமையில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மாணிக்கம், ஒன்றிய பொறியாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தனர்.

விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் ரோஜா ரமேஷ்குமார், ஜெ.ரவக்கிளி, எஸ்.தேவி சங்கர், ஏ.டி.நாகராஜ், எம்.ஜெயச்சந்திரன், உ.கலா உமாபதி, இ.சீனிவாசன், எம்.சிட்டிபாபு, மணிமேகலை கேசவன், அதிமுக மீனவர் அணி மாநில துணை செயலாளர் ஜெ.சுரேஷ், கூட்டுறவு சங்கத் தலைவர் தீனதயாளன், முல்லைவேந்தன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கண்ணம்பாக்கம் ஊராட்சி தலைவர் சதீஷ், ஆத்துப்பாக்கம் அமிர்தம் வேணு ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி நேதாஜி  நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் தேசியக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.

அதே போல கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தாமரைச்செல்வி தலைமையிலும், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் வெற்றிஅரசு, பதிவறை எழுத்தர் நரேந்திரன் தலைமையிலும் தேசிய கொடியேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments