நெய்வேலி அனல்மின் நிலையத்தில் விபத்து 
தமிழ்நாடு

நெய்வேலி விபத்து குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் அமித் ஷா

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

DIN

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 'நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயாராக இருப்பதாக முதல்வர் பழனிசாமியிடம் கூறினேன்.

ஏற்கெனவே விபத்து நடந்த இடத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. காயமடைந்தவர்கள் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

SCROLL FOR NEXT