முகப்பு
தமிழ்நாடு

கரோனா அச்சம்: கலவையில் இளைஞர் தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் கரோனா அச்சம் காரணமாக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
ராணிப்பேட்டை, கலவையில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் கரோனா அச்சம் காரணமாக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கலவையில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் வயது 26. சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரியும் இவர் கடந்த 10 நாட்களாக வயிற்று வலியின் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இதில் மனமுடைந்த சதீஷ்குமார் நேற்று காலை தன் அறையில் இருந்த கயிற்றில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கலவையில் உள்ள அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர் சதீஷ்குமார் பரிசோதித்த மருத்துவர்கள் சதீஷ்குமார் ஏற்கெனவே இருந்ததாக தகவல் தெரிவித்தனர். 

சதீஷ்குமாரின் பெற்றோர் மருத்துவரிடம் கூறியது..

தனது மகன் கரோனா வைரஸ் தனக்கு வந்துள்ளது என நினைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். இதை அறிந்த மருத்துவர்கள் இறந்த சதீஷ்குமாருக்கு கரோனா தொற்று பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்து வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சதீஷ் குமாரின் தந்தை ரவி கொடுத்த புகாரின் பேரில் கலவை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். சரவணமூர்த்தி. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும் வாலாஜா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பரிசோதனையில் சதீஷ் குமாருக்கு கரோனா தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது. இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →