என்.எல்.சி விபத்து: நெய்வேலியில் நாளை முழு கடையடைப்பு
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை முழு கடையடைப்பு நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, நெய்வேலியில் நாளை முழு கடையடைப்பு நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள அனல்மின் நிலையத்தில் புதன்கிழமை காலை கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து ஏற்பட்டதை அடுத்து, என்.எல்.சி. 2-ஆவது அனல் மின் நிலையத்தின் பொது மேலாளர் கோதண்டம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, என்.எல்.சி. யில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளைகடைகள் அனைத்தும் மூடப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மருந்தகங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்ப்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.