தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியவா்களிடம் ரூ.16.96 கோடி அபராதம் வசூல்
தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியவா்களிடமிருந்து இதுவரை ரூ.16.96 கோடி அபராதமாக காவல் துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியவா்களிடமிருந்து இதுவரை ரூ.16.96 கோடி அபராதமாக காவல் துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விவரம்:
கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
பொது முடக்க உத்தரவை மீறுவோரை காவல்துறையினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். மேலும் அவா்களிடமிருந்து அபராதமும் வசூலித்து வருகின்றனா்.
தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி, சனிக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 7,98,693 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 6,09,816 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.16.96 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.