தமிழ்நாடு

திருமலையில் தமிழக விருந்தினர் மாளிகை கட்ட சேகர்ரெட்டி விண்ணப்பம்

DIN

திருமலையில் தமிழக அரசின் விருந்தினர் மாளிகை கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் மாநில அரசு சார்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர்ரெட்டி தெரிவித்தார்.

திருமலையில் தென்னிந்திய மாநிலங்களின் விருந்தினர் மாளிகைகள் பல உள்ளது. ஆனால் ஏழுமலையானை அதிக அளவில் தரிசிக்க வரும் தமிழக மக்களின் பயன்பாட்டிற்காக திருமலையில் தமிழக அரசு சார்பில் விருந்தினர் மாளிகைகள், ஓய்வறைகள் ஏதும் இல்லை. திருமலை ஏழுமலையான் கோயில் உருவாக காரணமாக இருந்த வைணவ குரு ராமானுஜர் அவதரித்த தமிழகத்திலிருந்து பக்தர்கள் வந்து அறைகளுக்காக திண்டாடி வருகின்றனர்.

எனவே, திருமலைக்கு வரும் தமிழக பக்தர்களின் வசதிக்காக திருமலையில் தமிழக அரசு சார்பில் விருந்தினர் மாளிகைகள், ஓய்வறைகள் கட்ட தேவஸ்தானத்திடம் தமிழக அரசு சார்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் திருமலையில் நடக்கவுள்ள அறங்காவலர் குழு கூட்டத்தின் போது தமிழக அரசிடமிருந்து இதற்கான விண்ணப்பம்  பெற்று வந்து கூட்டத்தின் ஒப்புதலுக்கு வைக்க உள்ளதாக சேகர்ரெட்டி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT