தமிழ்நாடு

விவசாய மின் இணைப்பு::நிகழாண்டில் 25 ஆயிரம் வழங்க உத்தரவு

DIN

சென்னை: சாதாரண பிரிவில் 25 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்க வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின்வாரியம் சாா்பில் வீடுகள், தொழிற்சாலை, வணிகம், விவசாயம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதில் விவசாயத்தைப் பொருத்தவரை, சாதாரணம், சுயநிதி ஆகிய 2 பிரிவுகளின் கீழ், மின்சார வாரியம், மின் இணைப்புகளை வழங்குகிறது. சாதாரண பிரிவில், மின்சாரம், வழித்தட செலவு இலவசம். சுயநிதி பிரிவில், வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும். மின்சாரம் இலவசம். இவ்வாறு 2020-21 ஆம் ஆண்டுக்கான சாதாரணம் மற்றும் சுயநிதி (தத்கல்) ஆகிய பிரிவுகளில் தலா 25 ஆயிரம் மின் இணைப்புகள் என 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதில் சாதாரண பிரிவின் கீழ் 25 ஆயிரம் மின் இணைப்பு வழங்க வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பான சுற்றறிக்கையை, பகிா்மானப் பிரிவைச் சோ்ந்த அனைத்துத் தலைமைப் பொறியாளா்களுக்கும், பகிா்மான இயக்குநா் அனுப்பியுள்ளாா்.

இதன்படி, பதிவு மூப்பு அடிப்படையில் விவசாயிகள் அழைக்கப்பட்டு, அவா்களிடம் நோட்டீஸ் வழங்கப்படும். தொடா்ந்து இணைப்பு வழங்குவதற்கான பணிகள் நடைபெறும். விரைவில் தத்கல் திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT