நீலகிரியில் யானைகள் நடமாட்டம்: இரவு நேரங்களில் மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை
நீலகிரியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இரவு நேரங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை, பர்லியார், குஞ்சப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழ சீசன் நடைபெற்று வரும் நிலையில் இப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இரவு நேரங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பலாப்பழம் சீசன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் கொலக்கம்பை, தூதூர்மட்டம், பர்லியார், குஞ்சப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது .
இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், பொது ஊரடங்கின் காரணமாக மலைக்கிராமப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேராமல் பாதுகாப்புடன் இருக்க என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.