முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வழக்குகளில் இதுவரை ரூ.17.47 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வழக்குகளில் இதுவரை ரூ.17.47 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:55 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வழக்குகளில் இதுவரை ரூ.17.47 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் சுற்றுவோரை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர், அதிகாரிகள் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 8,27,963 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 7,54,582 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், 6,26,334 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ரூ.17.47 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →