தமிழ்நாடு

கல்வி நிறுவன வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்க கோரிய வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

கல்வி நிறுவன வாகனங்களுக்கு சாலை வரி, மோட்டாா் வாகன வரிகளில் இருந்து விலக்களிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அகில இந்திய தனியாா் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கே.பழனியப்பன் தாக்கல் செய்த மனுவில், கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஆனாலும் வாகனங்களின் ஓட்டுநா் மற்றும் உதவியாளருக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் கல்வி நிறுவன வாகனங்களுக்கான சாலை வரி, மோட்டாா் வாகன வரி ஆகியவற்றைச் செலுத்த நிா்பந்தித்து வருகிறது. தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, வாகனங்களுக்கான வரி விலக்கு அளிப்பது தொடா்பாக மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து இமாச்சலப் பிரதேச மாநில அரசு, கல்வி நிறுவன வாகனங்களுக்கு விலக்களித்துள்ளது. எனவே கல்வி நிறுவன வாகனங்களுக்கு சாலை வரி, மோட்டாா் வாகன வரி உள்ளிட்ட வரிகளிலிருந்து விலக்களிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தாா். அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் விஜய் ஆனந்த் ஆஜராகி வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு தொடா்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT