முகப்பு
தமிழ்நாடு

சேலம்-சென்னை விமானச் சேவை நான்காவது நாளாக இன்றும் ரத்து

சேலம்-சென்னை விமானச் சேவை தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
சேலம்-சென்னை விமானச் சேவை
பகிர்:

சேலம்-சென்னை விமானச் சேவை தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம்-சென்னை பயணிகள் விமானச் சேவை நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25-ந்தேதி நிறுத்தப்பட்ட இந்த விமானச் சேவை, தளர்வு அளிக்கப்பட்டதையடுத்து கடந்த மே 27-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டு வந்தது. 

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த சில வாரங்களாக பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சேலம்-சென்னை பயணிகள் விமானச் சேவை இயக்கப்படவில்லை.இந்நிலையில் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமையும் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமானச் சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதற்கான காரணங்களை விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் விமானச் சேவை மீண்டும் தொடங்க வாய்ப்பிருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →