தமிழ்நாடு

ஊத்தங்கரையில் நலிவடைந்த நாட்டுப்புற கிராமிய கலைஞர்களுக்கு நிவாரண உதவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நாட்டுப்புற கிராமிய கலைஞர்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

DIN


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நாட்டுப்புற கிராமிய கலைஞர்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு வருவாய் வட்டாட்சியர் செந்தில் குமரன் தலைமை வகித்து ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்தில் உள்ள 365 கிராமிய கலைஞர்கள் நலச் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் கொண்ட தொகுப்பினை வட்டாட்சியர் வழங்கினார்.

துணை வட்டாட்சியர் குமார், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், அனைத்து கிராமிய கலைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி, மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் சம்பத், மாவட்ட பொருளாளர் தங்கவேல், குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT