முகப்பு
தமிழ்நாடு

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.18.39 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வழக்குகளில் இதுவரை 6,41,564 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வழக்குகளில் இதுவரை 6,41,564 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

எனினும், அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு, வாகனங்கள் பறிமுதல், அபராதம் விதிப்பது என காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,41,564 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 7,94,610 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், 6,41,564 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ரூ.18.39 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →