முகப்பு
தமிழ்நாடு

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்ய மறுப்பு; உறவினர்கள் மறியல்

கல்லிடைக்குறிச்சியில் இயற்கையாக இறந்த கூலித் தொழிலாளரின் உடலுக்கு அம்பாசமுத்திரம் அரசு மருத்துமனையில் பிரேத பரிசோதனை செய்ய மறுத்ததால் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சியில் இயற்கையாக இறந்த கூலித் தொழிலாளரின் உடலுக்கு அம்பாசமுத்திரம் அரசு மருத்துமனையில் பிரேத பரிசோதனை செய்ய மறுத்ததால் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். 

கல்லிடைக்குறிச்சி காந்தாரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பரமசிவன். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு இரண்டு பெண்களும் ஒரு மகனும் உள்ளனர். மூவரும் திருமணமாகி தனித் தனியே வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் திங்கள்கிழமை காலை திடீரென்று பரமசிவன் உயிரிழந்தார். இதையடுத்து இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்த நிலையில் மாவட்டக் கண்காணிப்பாளரிடம் சிலர் பரமசிவன் மறைவில் மர்மம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனராம். 

இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் பரமசிவன் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்ய முடியாது என்று கூறி மறுத்துவிட்டனர். 

இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பரமசிவன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் மற்றும் முன்னாள் பேரூராட்சித் தலைவர் இசக்கிப்பாண்டியன் மற்றும் ஊர்ப்பெரியவர்கள் வந்து சமரசம் செய்ததையடுத்து பரமசிவன் உடலை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 
அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்ய முடியாது என்று கூறியதையடுத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.