தமிழ்நாடு

குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

DIN

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 

மின் கட்டணம் குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம் தெரிவித்த நிலையிலும், திமுக தேவையின்றி இன்று போராட்டம் நடத்தி வருகிறது. மக்களிடம் பீதியை ஏற்படுத்தவே திமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர். 

தமிழகம் முழுவதும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்ற அளவில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதில், 10% -க்கும் குறைவாகவே பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. 

மேலும், தமிழகத்தில் குறைந்த விலையில் தரமான முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்கும் பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT