தமிழ்நாடு

கந்த சஷ்டி கவசம் விவகாரம்: தமிழக அரசுக்கு நடிகர் ரஜினி பாராட்டு

DIN

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். 

கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் விடியோ வெளியிட்டதாக 'கறுப்பர் கூட்டம்' யூ டியூப் சேனல் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு இந்த அமைப்பைச் சேர்ந்த 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதோடு, நேற்று 'கறுப்பர் கூட்டம்' யூ டியூப் சேனலில் உள்ள விடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

'கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்கமுடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள், இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியணும். 

எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT