முகப்பு
தமிழ்நாடு

சீர்காழி: மத்திய, மாநில அரசைக் கண்டித்து கார், லாரி உரிமையாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள லாரிகள், கார்கள் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மத்திய, மாநில அரசை கண்டித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
மத்திய, மாநில அரசைக் கண்டித்து சீர்காழியில் கார், லாரி உரிமையாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள லாரிகள், கார்கள் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மத்திய, மாநில அரசைக் கண்டித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், சாலை வரியை ரத்து செய்யக் கோரியும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரியும் மற்றும் கரோனாவால் வேலையின்றித் தவிக்கும் ஓட்டுநர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி புறவழிச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள், கார்களை சாலையோரம் நிறுத்தி தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

மேலும், அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →