தமிழ்நாடு

ஆகஸ்ட் 1 முதல் தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் தொடக்கம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

DIN

ஆகஸ்ட் 1 முதல் 14 தொலைக்காட்சிகளின் மூலமாக வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கரோனா பரவும் சூழ்நிலையால் ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. மேலும் கடந்த கல்வியாண்டில் தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

பள்ளிகள் திறக்க முடியாத சூழ்நிலையில் தனியார் பள்ளிகள் பெரும்பாலானவை ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுளளன. இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் ஏற்கெனவே கூறியிருந்தார். 

இதையடுத்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 

14 தொலைக்காட்சிகளின் மூலமாக ஆகஸ்ட் 1 முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான் என்று தெரிவித்தார்.

மேலும், பள்ளிகள் திறப்பு, நடப்பு கல்வியாண்டில் பாடங்களை குறைப்பது பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் மாணவர்கள், மதிப்பெண் மறுமதிப்பீடு கோரினால் அதுகுறித்தும் அரசு பரிசீலிக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT