தமிழ்நாடு

சின்னசேலத்தில் வியாழக்கிழமை முதல் நான்கு நாள்கள் கடையடைப்பு 

DIN

சின்னசேலம் பகுதியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் வணிகர்கள் சங்கத்தினர் முழு கடையடைப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சி பகுதியில், மளிகைக் கடை ஊழியர், மருந்துக்கடை ஊழியர்கள் உள்ளிட்ட பலருக்கு அண்மையில், கரோனா தொற்று ஏற்பட்டது.

இதனையடுத்து ஆலோசனை மேற்கொண்ட சின்னசேலம் வணிகர் சங்கத்தினர் வியாழக்கிழமை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை முழு கடையடைப்பு மேற்கொள்வது என முடிவு செய்தனர்.

இதனை அடுத்து வியாழக்கிழமை (ஜூலை 23) சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வழக்கம்போல் மருந்தகம், பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்குகின்றன.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை இந்த முழு கடையடைப்பு தொடரும் என வணிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் சின்னசேலம் பகுதி முழுவதும் கடைகள் மூடப்பட்டு பொதுமக்கள், வாகனங்கள் வரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT