Chennai IIT 
தமிழ்நாடு

கண்காணிப்பு கேமராவின் புகைப்படத்தைத் தெளிவுபடுத்தும் தொழில்நுட்பம்: ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடிப்பு

கண்காணிப்பு கேமராவில் எடுக்கப்படும் புகைப்படத்தைத் தெளிவானதாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.

DIN

கண்காணிப்பு கேமராவில் எடுக்கப்படும் புகைப்படத்தைத் தெளிவானதாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.

இது தொடா்பாக அந்நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கண்காணிப்பு கேமராவில் எடுக்கப்படும் புகைப்படத்தில் படியும் பனி உள்ளிட்டவற்றைக் குறைத்து, தெளிவானதாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா். இதன்மூலம் குற்றச் சம்பவங்களில் விசாரணையை எளிதாக மேற்கொள்ள முடியும். மேலும், தெளிவான புகைப்படத்தை எடுக்க முடிவதால், தானாக இயக்கப்படும் வாகனம், சரியான இடத்துக்குச் சென்று சேர இந்த வகை தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, குற்றச் சம்பவங்களில் முக்கிய ஆதாரமாக விளங்கும் சிசிடிவி கேமராக்களில், எந்த தட்ப வெப்பநிலையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையோ, காணொலியையோ தெளிவானதாக மாற்ற முடியும். இந்த வகை தொழில்நுட்பத்தை மின் பொறியியல் துறை பேராசிரியா் ஏ.என்.ராஜகோபாலன் தலைமையிலான குழுவினா் முன்மொழிந்துள்ளனா். மேலும், இது புகழ்பெற்ற பொறியியல் தொடா்பான அறிக்கையிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மை லார்ட் வெளியீட்டுத் தேதி!

இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட்: இபிஎஸ் பாராட்டு

ஆஸி.க்கு எதிரான கடைசி டி20யில் பாகிஸ்தான் பேட்டிங்!

மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் ஒரே துறை?

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: மக்கள் விரோதமானது! - மமதா

SCROLL FOR NEXT