நடிகர் ஷாம் 
தமிழ்நாடு

சென்னையில் நேற்றிரவு நடிகர் ஷாம் கைது

பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய விவகாரத்தில் நடிகர் ஷாம் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 

DIN

பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய விவகாரத்தில் நடிகர் ஷாம் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார் நடிகர் ஷார். இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து நேற்றிரவு ஷாம் வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சோதனையில் நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர்களை கால்துறையினர் கைது செய்தனர். 

மேலும் அவர்களிடம் இருந்து பணம், சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யபட்டன. பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 12 பி, ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே,லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் ஷாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!

என் அடுத்த பட இயக்குநர் இவர்தான்: அருண் விஜய்

பிரதமர் மோடி வருகை சென்னைக்கு மாற்றம்!

ஜப்பானில் வெளியாகும் புஷ்பா -2! டோக்கியோ சென்றார் அல்லு அர்ஜுன்!

எங்கள் ஆதரவின்றி யாரும் மும்பையின் மேயர் ஆக முடியாது: காங்கிரஸ் எம்பி பேச்சு!

SCROLL FOR NEXT