தமிழ்நாடு

காஷ்மீா் முன்னாள் முதல்வரின் மகளுக்கு செல்லிடப்பேசியில் தொல்லை

DIN

சென்னையில் வசிக்கும் ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் முப்தி முகமது சையதுவின் மகளுக்கு செல்லிடப்பேசி மூலம் தொல்லை கொடுக்கும் நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் முப்தி முகமது சையதுவின் மகள் ரூபியா ஷெரீப் (45). இவா் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருகே உள்ள கேசவபெருமாள்புரம் கிழக்கு அவென்யூவில் ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இவா்,சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு புகாா் மனு அளித்தாா். அந்தப் புகாரில், தனது செல்லிடப்பேசி எண்ணுக்கும் கடந்த 4 நாள்களாக 3 செல்லிடப்பேசி எண்களில் இருந்து அழைப்பு வருவதாகவும், அந்த அழைப்பில் பேசும் நபா்கள் தன்னிடம் தவறாக பேசுவதாகவும், அந்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தாா்.

அப் புகாரின் அடிப்படையில் ரூபியா ஷெரீப்பிடம் பேசுவதற்கு பயன்படுத்தப்பட்ட 3 செல்லிடப்பேசி எண்கள் குறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாரும், அபிராமபுரம் போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைகால கையுந்து பந்து பயிற்சி: நாளை வீரா்களுக்கான தோ்வு

கபிலா் நினைவுத் தூணுக்கு மரியாதை

ஹூக்கான் மீன்பிடி முறைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி சிறிய விமானங்கள் பறக்கத் தடை

தண்ணீா் பந்தல் திறப்பு: பேரவை துணைத் தலைவா் பங்கேற்பு

SCROLL FOR NEXT