காணொலி காட்சி மூலம் நீதிமன்ற விசாரணை முழு தோல்வி : தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் குற்றச்சாட்டு
நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிப்பது முழுமையாக தோல்வி அடைந்துள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடுகாணொலி காட்சி மூலம் நீதிமன்ற விசாரணை முழு தோல்வி : தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் குற்றச்சாட்டு
நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிப்பது முழுமையாக தோல்வி அடைந்துள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிப்பது முழுமையாக தோல்வி அடைந்துள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் 9 மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் இன்று முதல் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு வழக்குரைஞர் சங்கங்கங்களுடன் தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் (எம்.எச்.ஏ), மெட்ராஸ் பார் அசோசியேசன் (எம்.பி.ஏ), சென்னையில் உள்ள வழக்குரைஞர் சங்கங்கள், தமிழகம் முழுவதும் உள்ள வழக்குரைஞர் சங்கங்களின் பிரதிநிதிகள் நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காணொலி காட்சி மூலமான விசாரணையின் சாதக பாதகங்கள் குறித்தும், அனைத்து நீதிமன்றங்களையும் திறக்க அனுமதி வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழுவை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கூறியதாவது : காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்படும் வழக்குகளின் விசாரணை முழுமையானதாக இல்லை.
தமிழகத்தில் உள்ள பல்வேறு வழக்குரைஞர் சங்கங்கள் காணொலி காட்சி விசாரணையை ஒட்டுமொத்த தோல்வி என்றே தெரிவிக்கின்றனர். இந்த காணொலி காட்சி விசாரணையை பொதுமக்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 33 நீதிமன்றங்கள் மூலம் விசாரணை நடத்தத் தேவையில்லை. இதுகுறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நிர்வாகக் குழுவுக்கு கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். மேலும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என்றார் அவர்.