தமிழ்நாடு

3 ஆயிரத்தை நெருங்கும் ராயபுரம்; சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம்

சென்னையில் உள்ள ராயபுரம் மண்டலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,935 ஆக உள்ளது. துவக்கம் முதலே இந்த மண்டலத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

DIN


சென்னையில் உள்ள ராயபுரம் மண்டலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,935 ஆக உள்ளது. துவக்கம் முதலே இந்த மண்டலத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15,770 ஆக உள்ளது. இவர்களில் 8,136 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 128 பேர் கரோனா பாதித்து பலியாகியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 7,387 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிகநகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய ஆறு மண்டங்களில் தினந்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்தே வருகிறது.

இந்த ஆறு மண்டலங்களில் ராயபுரத்தில் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்ககிறது. இதற்கு அடுத்த இடத்தில் கோடம்பாக்கமும், தண்டையார்பேட்டையும் உள்ளன.

சென்னையில் மட்டும் திங்கள்கிழமை ஒரேநாளில் 967 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை தமிழக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,162 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 967 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் புதிதாக 48 பேருக்கும், திருவள்ளூரில் புதிதாக 33 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 50 கோடிக்கு விற்பனையான டிமான்டி காலனி - 3 உரிமங்கள்!

45 சவரன் நகையைக் கண்டெடுத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை!

பிக் பாஸ் 9: வெளியேறும்போதுகூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

SCROLL FOR NEXT