தமிழ்நாடு

தமிழகத்தில் தொடர்ந்து 3 ஆம் நாளாக ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு; இன்று 1,091 பேருக்கு தொற்று உறுதி

DIN

தமிழகத்தில் இன்று புதிதாக 1,091 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்டவை அடங்கிய சமீபத்திய தகவலை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,091 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,036. பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர் 55.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 809 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மேலும் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரேநாளில் 536 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 13,706 பேர் குணமடைந்துள்ளனர். 

இன்றைய தேதியில் 10,680 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ந்து 3 ஆம் நாளாக கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி

SCROLL FOR NEXT