தமிழ்நாடு

வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் தொடரும்: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம்

DIN

சென்னையில் கரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும் என்று கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

வீட்டில் தனிமையில் இருக்க அரசு அறிவுறுத்தி, தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்காது விதிமுறைகளை மீறுவோர் மட்டுமே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்று விளக்கம் அளித்துள்ளார். 

முன்னதாக, கரோனா அறிகுறி உடையவர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறிய நிலையில் ராதாகிருஷ்ணன் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார். 

சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி வளாகத்தில் ஆணையர் பிரகாஷ், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று காலை ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது., 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT